கௌரவ தவிசாளர் அவர்களின் ஆசிச்செய்தி……

2018 மார்ச் மாதம் 09 ஆம் திகதி களுத்துறை பிரதேச சபையின் ஆறாவது தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நான் களுத்துறை பிரதேச சபையின் உத்தியோபூர்வ வளைத்தளத்திற்காக ஆசிச்செய்தியை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பமானது மனித இனத்தின் சமூக தேவைகளைப் போலவே சமூக இணைப்புக்களை பலமாக்குகின்ற பிரதான காரணியாக மாறியுள்ளது. நிகழ்கால உலகம் பூகோளமயமாக்கல் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் மற்றும் நபர்களுக்கிடையில் தகவலை பரிமாறும் செயற்பாட்டை மிகவும் வினைத்திறனாக்குவது வளைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். அதற்காக ஏற்புறுவதற்கு களுத்துறை பிரதேச சபைக்கு முடியுமாயிருப்பது நாம் பெற்ற அதிஷ்டமாகும்.

1987 இலக்கம் 15 ஐ உடைய பிரதேச சபை சட்டத்தின் மூலம் பிரதேச சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள  செயற்பாட்டு செயல்ஏற்பியான பொதுச் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள், பொது வீதிகள் மற்றும் பிரதேச மக்களின் சுகபோகமான வசதிகள் மற்றும் நலன்பரிகள் உட்பட அனைத்து வசதிகளையும்  பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக களுத்துறை பிரதேச சபையால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்துவதற்காக எமது தாபனத்தின் இவ்வளைத்தளம் மாபெரும் உதவியாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

அதைப்போலவே, களுத்துறை பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் வாழ்கின்ற பொது மக்களின் தேவைகளை உயர்ந்தபட்ச வினைத்திறனாக மற்றும் இலகுவாக பூரணப்படுத்துவதற்கு மற்றும் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மிகவும் ஆக்கத்திறனாக நிறைவேற்றுவதற்கு களுத்துறை பிரதேச சபையின் இவ்வுத்தியோகபூர்வ வளைத்தளத்தின் மூலம் இயலுமாக இருப்பதுடன், இவ்வளைத்தளத்திற்கு பிரவேசித்து உங்களுடைய தேவைகள் தொடர்பாக தகவல் பெற்றுக் கொள்ளுமாறு ​இவ்வதிகார பிரதேச பொது மக்களை மிகவும் கௌரவத்துடன் அழைப்பு விடுக்கிறேன்.

தேசகீர்த்தி சஞ்சீவ ஆரியரத்ன,
தவிசாளர்,
களுத்துறை பிரதேச சபை