கௌரவ செயலாளர் அவர்களின் ஆசிச்செய்தி…..
உள்ளூராட்சி மன்றங்களின் வளைத்தளங்களில் களுத்துறை பிரதேச சபையும் இணைவதற்கு வாய்ப்பு கிடைத்தமை எமக்குக் கிடைக்கப் பெற்ற வெற்றி என்பதுடன் அதற்காக ஆசிச்செய்தியை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போலவே இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலும் மேற்கொள்ள முடியுமான குறிக்கோள்களை எந்தவிதத்திலும் சுருக்கமாக குறிப்பிட முடியாது. அவ்வாறே, புதிய முகத்தோற்றத்துடன் கூடிய ஊடக கலாச்சாரம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் பாரியொரு ஆதிக்கத்தை ஏற்படுத்த முடியும்.
களுத்துறை பிரதேச சபையின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்களைப் போன்றே சேவைகள் தொடர்பாக பொதுமக்களை அறிவுறுத்துவதற்கும், மிகவும் வினைத்திறனான சேவைகளை பெற்றுக் கொள்வதை மக்களுக்கு இலகுபடுத்துவதற்கும் இவ்வளைத்தளம் பாரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்ப்பதுடன் அதன் மூலம் எமது தாபனத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை மிகவும் ஆக்கத்திறனாக அதிகார பிரதேச பொது மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றேன்.
இவ்வளைத்தளத்தை நிர்மாணிப்பதற்காக ஆலோசனை வழங்குள களுத்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சஞ்சீவ ஆரியரத்ன அவர்களுக்கும், இச்செயற்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பணியாற்றிய எனது பணிக்குழாமிற்கும், தொழில்நுட்ப சேவைகளை வழங்கிய மேல் மாகாண தகவல் தொழில்நுட்ப வள அபிவிருத்தி அதிகார சபைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், எமது வளைத்தளத்திற்கு பிரவேசிக்கின்ற உங்களுக்கு அவசியமான தகவலை பெற்றுக் கொள்ளுமாறும், உங்களுடைய கருத்துக்கள் மற்றும் பிரேரனைகளை குறிப்பிடுமாறும் களுத்துறை பிரதேச சபை அதிகார பிரதேச பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
ஜே.சி.பி. வீரசேகர,
செயலாளர்,
களுத்துறை பிரதேச சபை.